திருப்பாடல்கள் | ஆண்டவர் இன்று எழுந்தருள்வார் |
ஆண்டவர் இன்று எழுந்தருள்வார் மாட்சிமிகு மன்னர் இவரே (2) மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவையே (2) நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம் ஏனெனில் அவரே கடல்களின்மீது அதற்கு அடித்தளமிட்டாரே ஆண்டவரின் மலை மேலே ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார் கறைபடா கைகளும் மாசற்ற மனமும் உடையவர்கள் தானே பொய் தெய்வங்களை நோக்கி தம் உள்ளத்தை என்றும் உயர்த்தாதவர் |