திருப்பாடல்கள் | ஆண்டவர் என் ஆயன் |
ஆண்டவர் என் ஆயன் எனக்கேதும் குறையில்லையே பசும் புல் மேச்சலில் இளைப்பாறச் செய்பவர் ஆண்டவர் என் ஆயன் சமாதான நதிக்கு அழைத்துச் செல்பவர் ஆண்டவர் என் ஆயன் இருள் சூழ்ந்த பள்ளத்தில் நான் நடந்தாலும் எதற்கும் பயமில்லையே - உன் கோலும் நெடுங்கழியும் எனைத் தேற்றும் ஆண்டவர் என் ஆயன் விடிவுகள் முன்னே விரும்பிச் செய்பவர் ஆண்டவர் என் ஆயன் - என் தலையில் நறுமணத் தைலம் பூசி பாத்திரம் நிரப்புகின்றீர் என் வாழ்நாள் எல்லாம் உன் அருளும் நலமும் பேரன்பும் புடைசூழும் - நான் ஆண்டவர் இல்லத்தில் நெடுநாள் வாழ்வேன் வாழ்ந்து மகிழ்ந்திருப்பேன் |