திருப்பாடல்கள் | ஆண்டவரே வாழ்வளிக்கும் |
ஆண்டவரே வாழ்வளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன-2 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது - அது புது உயிர் அளிக்கின்றது-2 ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது - அது எளியோர்க்கு ஞானம் அளிக்கின்றது-2 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை - அவை இதயத்தை மகிழ்விக்குமே-2 ஆண்டவரின் கட்டளைகள் ஒளியானது - அது கண்களை என்றும் ஒளிர்விக்குமே-2 |