திருப்பாடல்கள் | ஆண்டவருடைய காலத்தில் |
ஆண்டவருடைய காலத்தில் நீதி தழைத்தோங்கும் (2) கடவுளே அரசர்க்கு உமது நீதி வழங்க ஆற்றல்தாரும் அரசமைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும் அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக (2) உமது எளியோர்க்கு நீதித் தீர்ப்பு வழங்குவாராக (2) ஏனெனில் தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகள் அனைவரையும் திக்கற்ற எளியோரை அவரே என்றும் விடுதலை செய்திடுவார் வறியோர்க்கும் ஏழைகட்கும் இரக்கம் காட்டுவார் (2) ஏழைகளின் உயிரினை என்றும் அவரே காத்துக் கொள்வார் (2) |