திருப்பாடல்கள் | ஆண்டவருக்கு புதியதொரு பாடல் |
ஆண்டவருக்கு புதியதொரு பாடல் ஒன்று பாடுங்கள் அவருடைய அன்பர் சபையில் அவரைப் புகழ்ந்து பாடுங்கள் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா மகிமைமிகு விண்மீதில் அவரைப் போற்றுகள் அவரின் வல்ல செயல்களுக்காய் அவரைப் போற்றுங்கள் எல்லையில்லா மாண்பைக் குறித்து அவரைப் போற்றுங்கள் எக்காளம் முழங்கியே அவரைப் போற்றுங்கள் ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கிறார் தாழ்நிலையில் உள்ளோரை மேன்மைப்படுத்துவார் மங்களம் கொட்டி மத்தளம் தட்டி அவரைப் போற்றுங்கள் மண்ணில் வாழும் உயிர்களெல்லாம் அவரைப்போற்றிப் பாடுங்கள் |