திருப்பாடல்கள் | ஆண்டவரே என்னை என்றும் காத்தருளும் |
ஆண்டவரே என்னை என்றும் காத்தருளும் உம்மிடம் அடைக்கலம் நான் புகுந்தேன் என் இதயம் அகமகிழும் களிகூரும் என்றென்றும் கவலையின்றி இளைப்பாறும் நீரே என் ஆண்டவர் என்றுரைத்தேன் உம்மையன்றி எனக்கு வேறு நன்மை இல்லை ஆண்டவர் தாமே என் உரிமைச் சொத்து அவர் தாமே எனது மீட்பின் கிண்ணம் மகிழ்ச்சியூட்டும் இடத்தில் எனக்கு பங்கு கிடைத்தது என் உரிமைப்பேறு எனக்கு நேர்த்தியாயிற்று அறிவுரைத்த ஆண்டவரை வாழ்த்திடுவேன் இரவில் கூட என்னிதயம் பாடிடுமே |