திருப்பாடல்கள் | ஆண்டவரே வாழ்வின் வழியை |
திருப்பாடல் 16 ஆண்டவரே வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர் (2) இறைவா என்னைக் காத்தருளும் உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன் - நான் ஆண்டவரிடம் நீரே என் தலைவர் வேறு செல்வம் எனக்கில்லை என்றே சொன்னேன் ஆண்டவர் தாமே என் உரிமைச் சொத்து அவரே என் கிண்ணம் எனக்குரிய பங்கை காப்பவரும் அவரே எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன் போற்றுகின்றேன் இரவில் கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன் அவர் என் வலப்பக்கம் உள்ளார் எனவே நான் அசைவுறேன் |