திருப்பாடல்கள் | ஆண்டவரே, உம் கூடாரத்தில் |
பதிலுரைப் பாடல்: திபா 15: 2-3a. 3bc-4ab. 5 (பல்லவி: 1a) பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்? மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர் உளமார உண்மை பேசுவர் தம் நாவினால் புறங்கூறார். - பல்லவி தம் தோழருக்குத் தீங்கிழையார், தம் அடுத்தவரைப் பழித்துரையார். நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர், ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர். - பல்லவி தம் பணத்தை வட்டிக்குக் கொடார், மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார், - இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். - பல்லவி |