திருப்பாடல்கள் | ஆண்டவரே உம் பெருமையும் |
ஆண்டவரே உம் பெருமையும் மகிமையும் என்ன ஆ...ஆ...ஆ...ஆ..ஆ...ஆ...(2) போர்வைக்காகவே ஒளியைக் கொண்டுள்ளீர் கூடாரமாக வான விரிவையும் இரதங்களென நல்ல மேகங்களைக் கொண்டுள்ளீர் காற்றுகள் உமக்கு கீழ்ப்படிகின்றன் நெருப்பு உமது நல் ஊழியன் தானே நீர் தான் பூமியின் முகத்தை உருவாக்கினீர் ஆழ்கடலை அதனிடத்தில்தான் வைத்தீரே மலைகள் அங்கே பள்ளத்தாக்குகள் இங்கே நீரூற்றுக்கள் வழிந்தோட வயல் வெளியில் மிருகங்கள் அங்கே பருக வருகின்றன ஆண்டவரே நீர் எவ்வளவோ பெரியவர் அழகான மகத்துவம் உள்ளவர் மகிமை உள்ளவர் |