Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

திருப்பாடல்கள் ஆண்டவரது உடன்படிக்கையைக்  
திபா 25: 4-5ab. 6-7bc. 8-9 (பல்லவி: 10)
பல்லவி: ஆண்டவரது உடன்படிக்கையைக்
கடைப்பிடிப்போரின் பாதைகள் உண்மையானவை.

4
ஆண்டவரே, உம் பாதைகளை
நான் அறியச்செய்தருளும்;
உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.
5ab
உமது உண்மை நெறியில் என்னை நடத்தி
எனக்குக் கற்பித்தருளும்;
ஏனெனில், நீரே என் மீட்பராம்
கடவுள். - பல்லவி

6
ஆண்டவரே, உமது இரக்கத்தையும்,
உமது பேரன்பையும் நினைந்தருளும்.
ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே.
7bc
உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்;
ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். - பல்லவி

8
ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால்,
அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9
எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்;
எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். - பல்லவி

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்