திருப்பாடல்கள் | ஆண்டவர் தோற்றுவித்த |
ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே இன்று அக்களிப்போம் அகமகிழ்வோம் இன்று அக்களிப்போம் அகமகிழ்வோம் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் ஏனெனில் அவர் நல்லவர் என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு என இஸ்ராயேல் மக்கள் சாற்றுவார்களாக ஆண்டவர் வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது அவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது நான் இறந்தொழியேன் உயிர் வாழ்வேன் ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன் கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டிடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! |