திருப்பாடல்கள் | ஆண்டவர் எத்துணை இனியவர் |
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள் (2) ஆண்டவரை நான் எக்காலமும் போற்றிடுவேன் (2) அவரது புகழ் எப்பொழுதும் எனது நாவில் ஒலித்திடுமே நான் ஆண்டவரைப் பெருமையாகப் பேசுவேன் (2) எளியோர் இதைக் கேட்டு அகமகிழ்வர் மகிழ்ச்சி கொள்வர். என்னோடு ஆண்டவரை பெருமைப் படுத்துங்கள் அவரது பெயரை மேன்மைப் படுத்துவோம் (2) நான் துணைவேண்டி ஆண்டவரை மன்றாடினேன் (2) அவர் எனக்கு மறுமொழி தந்தார் (2) |