திருப்பாடல்கள் | ஆண்டவர் தம் உடன்படிக்கையை திருப்பாடல் 105 |
ஆண்டவர் தம் உடன்படிக்கையை நினைவில் கொண்டுள்ளார் அவர் பெயரை சொல்லி நன்றி பாடல் பாடுங்கள் (2) ஆண்டவரின் செயல்கள் என்றும் மகத்தானவை அவரின் நீதித்-தீர்ப்பை என்றும் நினைவில் கொண்டிருங்கள் (2) ஆண்டவரைத் தேடுவோரே ஆர்ப்பரியுங்கள் (2) அவரின் முகத்தை இடையறாது நாடிடுங்கள் ஆண்டவரின் ஊழியரே யாக்கோபின் பிள்ளைகளே ஆபிரகாம் வழி மரபே தேர்ந்து கொண்டோரே (2) அவர் தமது உடன்படிக்கையை நினைவில் கொள்கிறார் (2) தலைமுறைக்கென தந்த வாக்கை நினைவு கூர்கிறார் |