Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 திருப்பாடல்கள்  501 - போற்றுவேன் ஆண்டவா உம்மை - திருப்பா: 8  

போற்றுவேன் ஆண்டவா உம்மை
மனதாரப் போற்றிடுவேன் - நான்
மாட்சிமை நிறைந்த மன்னவன் நீ
ஆட்சியும் அரசும் உள்ளவன் நீ 2

பாலர்களின் மழலையிலும் குழந்தைகளின் மொழியினிலும்
உந்தன் வலிமையும் உறுதியும் உண்டு
தீயவரின் தோல்வியிலும், பகைவர்களின் வீழ்ச்சியிலும்
உந்தன் மேன்மையும் நீதியும் உண்டு

வானத்திலே விண்ணிலவை விண் மீன்களை அமைத்தீரே
மனிதனுக்காக அமைத்தீரே
பூமியிலே பறவைகளை விலங்கினத்தைப் படைத்தவர் நீரே
மனிதன் ஆண்டிட அளித்தீரே

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்