Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 திருப்பாடல்கள்  499 - நீ எந்தன் பாறை என் அரணான யேசுவே தி.பா. 148  

நீ எந்தன் பாறை என் அரணான யேசுவே
நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே
அணையாத தீபமே இயேசுவே இயேசுவே

ஒளி கொண்டு தேடினால் இருள் நில்லுமோ
உன் துணையில் வாழ்க்கையில் துயர் வெல்லுமோ
தடை கோடி வரலாம் உளம் தவித்தோடி விடலாம்
ஆனாலும் உன் வார்த்தை உண்டு
எது போனாலும் உனில் தஞ்சம் உண்டு
இயேசுவே இயேசுவே

இரவுக்கும் எல்லை ஓர் விடியலன்றோ
முடிவாக வெல்வதும் நன்மையன்றோ
தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம்
என்றென்றும் உன் ஆசி கொண்டு
வரும் நல் வாழ்வை கண்முன்னே கண்டு
இயேசுவே இயேசுவே

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்