திருப்பாடல்கள் | 497 - தூபம் போல் என் ஜெபம் உந்தன் பாதம் (தி.பா.141) |
தூபம் போல் என் ஜெபம் உந்தன் பாதம் சேர வேண்டும் நேசதந்தாய் உந்தன் அருள் எம்மைத் தேற்ற வேண்டும் வாழும் திருச்சபையின் நலன் யாவும் நல்க வேண்டும் வாழ்வும் அவர் மொழியும் உந்தன் அரசைக் கட்ட வேண்டும் நாட்டின் பொது நலனை என்றுமே காக்க மனம் வெண்டும் நீதியுடன் அன்பின் மக்கள் வாழ்வு உய்ய வேண்டும் நேசம்கொண்ட நண்பர் சுற்றத்தாரும் வாழ வேண்டும் தியாகம் செய்து உதவும் உபகாரிகள் வாழ வேண்டும் நோயில் வாழும் மாந்தர் நலம் காண அருள் வேண்டும் வாடிச் சுமை தாங்கும் மக்கள் பாரம் நீங்க வேண்டும் |