திருப்பாடல்கள் | 495 -என் நன்றிப் பாடல் எமக்கே என் இறைவா தி.பா. 118 |
என் நன்றிப் பாடல் உமக்கே என் இறைவா எந்நாளும் நான் பாடுவேன் உன் அன்பு எனக்கு குறையின்றியிருக்க நிறைவாக நான் வாழுவேன் நன்மையும் அன்பும் நிறைவான தேவா 2 உனை நினைத்து மனமகிழுவேன் - நான் - 2 என்றென்றும் இனியதாய் உன் அன்பு என்பேன் என மகிழ்ந்தர் இஸ்ராயேலர் இடர் வந்த வேளை துணை நின்ற காத்தீர் வினை தீர்க்கும் என் தேவனே பகை கொண்டு பலரும் வெறுத்தென்னை மறுத்தும் நின் படை பலம் என் அரணாகுமே நிறைவாய் உன் வலக்கை என் மேலே இருந்தால் உன் ஆற்றல் மீட்பாகுமே இறந்தாலும் உயிர்ப்பேன் இறையன்பில் வளர்த்தாய் நிறைவாக நிதம் காணுவேன் மாற்றறார் தாம் வியக்க அகமகிழ்ந்து நாளும் - நின் இறையாட்சி துணை என்னிலே |