திருப்பாடல்கள் | 494 - என் இறைவா என் இறைவா - தி பா.129 |
என் இறைவா என் இறைவா ஆழத்தில் நின்றும்மை அழைக்கின்றேன் என் இறைவா என் இறைவா பரிவிரக்கமும் மீட்பும் நீர் ஆழத்தில் நின்றும்மை கூவியழைக்கின்றேன் ஆண்டவரே ஆண்டவரே நீர் என் குரலைக் கேட்பீரே கெஞ்சி மன்றாடும் என் கூக்குரலுக்கே நீர் கவனமாய் உந்தன் காது கொடுப்பீரே ஆண்டவரே நீரே என்குற்றம் கணிப்பீராயின் யார்தான் நிலை நிற்க முடியும் ஆண்டவரே ஆனால் உம்மேல் பயபக்தி கொள்ளும் பொருட்டே மன்னிப்பு உமதிடம் உள்ளதேயன்றோ ஆண்டவரை நம்பி என் ஆன்மா காத்திருக்கும் அவர் தம் சொல்லை நான் நம்பியிருக்கின்றேன் காவலர் வைகறை காத்திருப்பதை விட என்ஆன்மா ஆண்டவரை எதிர்பார்க்கின்றதே |