திருப்பாடல்கள் | 493 - என் ஆற்றலின் ஆண்டவரை தி பா26 - 30 |
என் ஆற்றலின் ஆண்டவரை - நான் எந்நாளும் போற்றிடுவேன் நம் அருள் மொழி கேட்க காலமெல்லாம் அவர் காலடி அமர்ந்திடுவேன் ஆண்டவர் எனது அரணாவார் - அவரே எனக்கென்றும் துணையாவார் - 2 வலிமையும் வாழ்வும் வழங்கும் தேவன் என்னுடன் இருக்கின்றார் என்றும் இருக்கின்றார் ஆண்டவர் எனது மீட்பராவார் - அவரே எனக்கென்றும் ஒளியாவார் - 2 வாழ்வாய் வழியாய் விளங்கும் தேவன் சீர் வழி நடந்திடுவார் அவர் வழி தொடர்ந்திடுவேன் |