திருப்பாடல்கள் | 492 - என் ஆயன் என் ஆண்டவர் - தி.பா.23 |
என் ஆயன் என் ஆண்டவர் இனியெனக்கு என்ன குறைவு என் ஆயன் என் ஆண்டவரே இருளில் நான் எங்கு சென்றாலும் தீமைகள் எதற்கும் பயமில்லை ஏனெனில் ஆண்டவர் என்னோடு இருக்கின்றார் என்றும் ஆனந்தமே அவர் செங்கோலும் கைத்தடியும் எனக்கு ஆறுதல் அளிக்கின்றன இறைவன் துணையால் எனக்கு பயமில்லை பசும்புல் மேய்ச்சலில் என்னை இளைப்பாறச் செய்கின்றார் எனது களைப்பை ஆற்ற நீர் அருவிக்கு அழைத்துச் செல்கின்றார் எனக்கு புத்துயிர் ஊட்டுகிறார் தனது அன்பால் என்னைப் படைத்தார் என்னை நேரிய வழியில் நடத்துவார் உலகோர் அனைவரின் முன்னிலையில் உயர்ந்த விருந்தெனத் தன்னைத் தந்தார் என்னை அவரின் மந்தையிலே ஏற்றுக் காத்து வருகின்றார் கருணையும் அருளும் எனைத் தொடரும் என் வாழ்நாள் எல்லாம் எனைத் தொடரும் ஆண்டவர் இல்லத்தில் நான் என்றும் வாழ்வேன் |