Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 திருப்பாடல்கள்  491 - எத்துணை இனியவர் ஆண்டவர் என்று - திபா: 34  

எத்துணை இனியவர் ஆண்டவர் என்று
நித்தமும் அவரைச் சுவைத்திடுங்கள்
நம்தன நம்தம் தானானே நம்தனநம்தம்
நம்தனம்- 6 தானானே நம்தனநம்தம்

துணைவேண்டி நானும் தினம் நாடி நின்றேன்
நலம் நல்கி அவரும் புலம் போற்ற வைத்தார் - 2

வசை மொழிகள் மிகுந்து திசை மாறிச் சென்றேன்
வினை தீர்த்த இறைவன் குறை நீங்கச் செய்தார் - 2

வலியோராம் தீயோர் வாட்டமுற வைப்பார்
எளியோர் தம் மாந்தர் ஏற்றம் பெறச் செய்வார் - 2


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்