திருப்பாடல்கள் | 490 - உன்னை நான் நினையாதிருந்தால் தி பா 136 |
உன்னை நான் நினையாதிருந்தால் என் வாழ்வு அழிந்திடுமே - யேசுவே உன்னை நான் நினையாதிருந்தால் நீர் பாயும் நதியோரம் நீர் சிந்தும் விழியோடும் இறைவா உன் முகம் நோக்கினேன் - 2 சிறை செய்வார் எதிர் வந்து இசையோடு யாழ் கொண்டு புகழ் கீதம் முழங்கச் சொன்னார் - 2 அந்நிய தேசத்து மண்மேலே இறைவனை மறந்தவர் முன்னாலே - 2 எவ்வாறு புகழ் பாடுவேன் - நான் எவ்வாறு புகழ் பாடுவேன் உனைப்பாடும் மொழியின்றி என் நாவில் வேறில்லை எந்நாளும் உன் கீதமே - 2 நீயின்றி மகிழ்வாக நிலம் ஏதில் நான் வாழ ஒருபோதும் நினைத்தேனில்லை - 2 சிந்தும் நீர்த்துளி நதியாக சலங்கை இழந்த கதியாக - 2 இறைவா உன் வரம் வேண்டினேன் - நான் இறைவா உன் வரம் வேண்டினேன் |