திருப்பாடல்கள் | 487 - இறை வழி செல்வோர் பேறு பெற்றோர் (தி.பா: 1) |
இறை வழி செல்வோர் பேறு பெற்றோர் இறை வழி செல்வோர் பேறு பெற்றோர் பேறு பெற்றோர் பேறு பெற்றோர் -2 தீயோரின் அறிவுரை கேளாதவன் பாவியின் வழியில் செல்லாதவன் பழிகாரர் கூட்டத்தில் அமராதவன் பேறு பெற்றோன் பேறு பெற்றோன் மாசற்ற வாழ்க்கை நடத்துபவன் நீதி நியாயத்தில் நிலை நிற்பவன் இதயத்தில் இனியவை தியானிப்பவன் பேறு பெற்றோன் பேறு பெற்றோன் தீயோரை இழிவாகக் கருதாவன் பிறரைப் பழித்துப் பேசாதவன் நாவால் பழிச்சொல் கூறாதவன் பேறு பெற்றோன் பேறு பெற்றோன் |