திருப்பாடல்கள் | 486 - இந்தோள இராகங்கள் பாடு (திருப்பா: 148-150) |
இந்தோள இராகங்கள் பாடு இந்நாளில் இறை புகழைக் கூறு 2 அன்பாளன் அன்பை அருளாளன் அருளை - 2 குழலூதி யாழிசைத்து குலமலரைப் போற்று கதிரவனே சந்திரனே கலை எழிலைப் பாடு வானங்களின் விண்மீனே வானவனைப் பாடு - 2 வண்ணமலர் லீலிகளே மன்னவனைப் பாடு கலை முகிலே தீந்தமிழே மைந்தன் புகழைப்பாடு - 2 நாதமிகு தாளத்துடன் நாதன் புகழைப் பாடு முரசொலித்து நடனம் செய்து அவர் புகழைப் பாடு கைத்தாள ஒலி முழங்க கருணை யேசைப் புகழு எக்காளத்தொனி முழங்க இறை புகழைப் போற்று - 2 பைந்தமிழில் பாட்டிசைத்துப் பாரிலுனைப் போற்றும் கொஞ்சுமொழிக் குழந்தையெனக் குரலெடுத்து வா வா - 2 செல்லமுத நீதியினைத் தீரமுடன் முழங்கு சீர் பொழியும் மாரியென அறநெறியைக் கூறு - 2 நாநிலமும் நல்லவரும் நாவால் உனைப் புகழ நல்மனத்தோர் உள்ளமெல்லாம் நாதன் நீயே ஆள மங்காது நிலை நிற்கும் மனித மாண்பு மிளிர நீங்காத அன்பினைப்போல் மனிதரெல்லாம் இணைய - 2 |