திருப்பாடல்கள் | 484 - ஆவலுடன் நான் ஆண்டவருக்காக |
ஆவலுடன் நான் ஆண்டவருக்காக அவரும் என்னைக் கனிவாகக் கண்ணோக்கினார் - 2 என் குரலுக்கு அவர் செவி கொடுத்தார் எழுந்திட எனக்கவர் கை கொடுத்தார் பாறையில் கால்களை ஊன்றச் செய்தார் பாதையில் துணைவரும் காவலானார் நாளும் இறை புகழ் இசைத்திடவே நாவில் வைத்தார் புதுப்பாடல் கண்டு கலங்கிய அனைவருமே கடவுளை நம்பி மகிழ்வுற்றார் ஆணவக்காரரை நாடாது அழிவுப்பாதையில் நடவாது இறைவனை என்றும் நம்புபவன் இனிதே வாழும் பேறுபெற்றான் எங்களை என்றும் நினைவில் வைத்து இன்னருள் செயல்பல அவர் புரிந்தார் அவருக்கிணையாய் யாருமில்லை அவர் செயல் விளக்கிட நாவுமில்லை |