Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 திருப்பாடல்கள்  484 - ஆயிரம் துதிப்பாடல் - (தி.பா: 18)  

ஆயிரம் துதிப்பாடல் - எந்தன்
நாவினில் அசைந்தாடும்
ஆனந்தம் ஆனந்தம் என் மனதில்
ஆண்டவா உனைப் பாட - 2

வான் முகிலும் உயர் மலையும்
உந்தன் புகழ் பாட
தேன் பொழியும் நறு மலர்கள்
உந்தன் பெயர் பாட
வான் பொழியும் நீர்த்துளிகள்
உந்தன் அருள் பாட
யான் உனது திருப் புகழை
கவியால் தினம் பாட - ஆண்டவா

பகல் ஒளியும் பால் நிலவும்
ஒளியாம் உனைப்பாட
அலை கடலும் அதன் சிறப்பும்
கருணையின் விதம் பாட
மழலைகளின் தேன் மொழிகள்
தூய்மையின் நிறம் பாட
யான் உனது திருப் புகழை
கவியால் தினம் பாட - ஆண்டவா


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்