திருப்பாடல்கள் | 483 - ஆண்டவனே உன் வீட்டில் |
ஆண்டவனே உன் வீட்டில் குடியிருப்பவர் யாரோ? உமது தூய மலையினிலே வாசம் செய்பவர் யாரோ? மாசின்றி நடந்திடுவான் நீதியை இயற்றிடுவான் இதயத்தில் நேரியவை எந்நாளும் நினைத்திடுவான் நாவினிலே தீயவையே ஒருநாளும் பேசறியான் அயலாற்கு யோசத்தை என்றுமே செய்தறியான் தீயோரைப் பெரிதாகப் பேசியே மதித்தறியான் தேவ பயம் உள்ளாரைப் பெரிதுமே மதித்திடுவான் பெரு நஷ்டம் வந்திடினும் தன் சொல்லைக் காத்திடுவான் அநியாய லாபத்தை தேடியே திரியானே மாசற்றொர் வருந்திடவே லஞ்சத்தை பெற்றறியான் இவனன்றோ எந்நாளும் இறைவனோடு வாழ்ந்திடுவான் |