திருப்பாடல்கள் | 480- ஆண்டவரே உம்மை நான் நம்பியுள்ளேன் |
ஆண்டவரே உம்மை நான் நம்பியுள்ளேன் அடைக்கலம் நீ தந்திட வேண்டும் ஆண்டவரே உமதில்லம் நாடி வருகிறேன் எனது குறை போக்கி நிறை வழி நடத்திடுவாய் ஆயனில்லா மந்தையாய் அலைந்து திரிகிறேன் அன்பர் உந்தன் அரவணைப்பில் அமைதிகாண்கிறேன் - 2 ஆ ஏழ்மையாய் வறுமையாய் சோர்ந்து போகிறேன் இணைந்து வந்து பகிரும்போது முழுமையாகிறேன் மகிழ்ச்சியூட்டும் தேவன் உந்தன் பாதை செல்லுவேன் பகிர்ந்து வாழும் பணியிலே நிறைவு காணுவேன் (ஆண்டவரே) உரிமையின்றி உடமையின்றி வளமையிழக்கிறேன் உமது நிறை உரிமை வாழ்வில் உறுதி பெறுகிறேன் - 2 ஆ மனித நேய உணர்வின்றி வெறுமையாகிறேன் பிறரை மதிக்கும் நன்னெறியில் மனிதம் காண்கிறேன் நம்மைக் காக்கும் தேவனின் கரம் பிடித்திடுவேன் வறுமை போக்கும் பணியிலே வளமை காணுவேன் (ஆண்டவரே) |