Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 திருப்பாடல்கள்  478 - ஆண்டவரின் திருச்சந்நிதியில் - தி.பா: (100)  


ஆண்டவரின் திருச்சந்நிதியில்
ஆனந்தமுடனே பாடுவீரே

மகிழ்வுடன் அவரை ஆராதிப்பீர்
மங்கள கீதம் முழங்கிடுவீர்
அவரே தேவன் என்றறிவீர்
அவரே நம்மைப் படைத்தாரே

நாம் அவர் மேய்ச்சலின் ஆடுகளாம்
நாமே அவரது பெருமக்களாம்
துதி புகழோடு நுழைந்திடுவோம்
தூய அவரது வாசல்களில்

தேவனின் திருப்பெயர் தோத்தரிப்பீர்
தேவனின் நன்மை சாற்றிடுவீர்
தேவனின் கிருபை உண்மையுமே
தலைமுறை தலைமுறை நீடிக்குமே

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்