Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 திருப்பாடல்கள்  477 - ஆண்டவர்க்குப் புகழ் உரைப்பேன்  

ஆண்டவர்க்குப் புகழ் உரைப்பேன்
அவர் நாமத்தை என்றும் ஏத்துவேன்

என்றென்றும் ஆண்டவரை வாழ்த்துவேன்
எப்பொழுதும் அவர் புகழ் என் நாவிலெழும் - என்
ஆத்துமமோ ஆண்டவரில் பெருமை கொள்ளும்
சாந்தமுள்ளோர் இதைக் கேட்டுப் பூரியுங்கள்

என்னேடு ஆண்டவரைத் துதியுங்கள்
ஒன்றித்து அவர் நாமம் புகழ்ந்திடுவோம்
ஆண்டவர் என் மன்றாட்டைக் கேட்டருளி - எனை
எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார்

ஆண்டவர் முன் ஓடி வந்து ஒளி பெறுங்கள்
உங்கள் முகம் வெட்கமடையாதிருக்கும்
அபலை நான் ஓலமிட ஆண்டவரும் என்
மன்றாட்டைக் கேட்டருளினார்

ஆண்டவருக் கஞ்சியென்றும் வாழ்வோரை - அவர்
தூதரெல்லாம் சுற்றி நின்று காத்திடுவார்
ஆண்டவரின் இனிமைதனைச் சுவைத்துப்பார்
அவரையென்றும் நம்பினவன் பாக்கியவான்

புனிதர்களே ஆண்டவருக்குப் பயந்திருங்கள்
ஏனென்றால் உங்களுக்கோர் குறையேயில்லை
தனவந்தன் குறையுற்றுப் பசி கொண்டார்
ஆண்டவரைத் தேடுவோர்க்குக் குறையொன்றில்லை

வல்லவராம் பிதாவை நாம் வாழ்த்திடுவோம்
சுதன் யேசுக் கிறிஸ்துவுக்கும் ஸ்தோத்திரமே
உள்ளத்தில் குடி கொள்ளும் ஆவிக்கும்
என்றென்றும் புகழ் ஒலிக்க ஆமேன்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்