திருப்பாடல்கள் | 474 - ஆண்டவர் தம் திருத்தலத்தில் - (தி.பா: 1) |
ஆண்டவர் தம் திருத்தலத்தில் அஞ்சாமல் நிற்பவன் யார் அருள் நிறைந்த அவர் ஆசிகளை அன்றாடம் பெறுபவன் யார் மாசற்ற வாழ்க்கை நடத்துபவன் மாண்புறு செயல்களை செய்கிறவன் அவனை இறைவன் என்றுமே அணைத்து ஆசீர்வதித்திடுவார் - 2 தீயோர் கூட்டத்தில் சேராதவன் தீமைகள் எதுவும் செய்யாதவன் அவனை இறைவன் என்றுமே அணைத்து ஆசீர்வதித்திடுவார் - 2 வாக்குறுதி என்றும் மாறாதவன் வார்த்தை வஞ்சகம் செய்யாதவன் அவனை இறைவன் என்றுமே அணைத்து ஆசீர்வதித்திடுவார் - 2 எளிமையாய் இனிமையாய் வாழ்கிறவன் ஏழ்மையாய் தூய்மையாய் இருக்கிறவன் அவனை இறைவன் என்றுமே அணைத்து ஆசீர்வதித்திடுவார் - 2 |