Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

  திருப்பாடல்கள்  473 - ஆண்டவர் தம் திருத்தலத்தில்  


ஆண்டவர் தம் திருத்தலத்தில் - அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
மாண்புயர் வான் மண்டலத்தில் - அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
அவர் செயல்களின் மாண்பை நினைந்து - அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
அவர் உன்னத மாட்சியை நினைத்து - அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
எக்காள தொனி முழங்க - அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
வீணையுடன் யாழிசைத்து - அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
முரசொலித்து நடனஞ் செய்து - அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
நரம்பிசைத்து குழல் ஊதி - அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
நாதமிகு தாளத்துடன் - அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
கைத்தாள ஒலி முழங்க - அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
உயிருள்ளதெல்லாமே - அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
ஆண்டவர் தம் திருத்தலத்தில் - அவரைப் புகழ்ந்தேத்துங்கள்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்