திருப்பாடல்கள் | 472 - ஆண்டவர் தம் புகழ்ச்சிகளை |
ஆண்டவர் தம் புகழ்ச்சிகளை அவர் செய்த புதுமைகளை அவர் வல்லமைச் செயல்களையே என்றென்றுமே புகழ்ந்திடுவோம் அடிமைகளாய் இருந்தவர்க்கு விடுதலையை அளித்தாரே நம் ஐனத்தை மீட்டாரே அவரை நாம் புகழ்ந்திடுவோம் செம்மறியின் இரத்தத்தையே கதவுகளில் கண்டாரே அங்கிருந்த அடியவரை அன்புடன் காத்தருளினாரே செங்கடலைக் கடந்திடவே செம்மறியுடன் வழி செய்தார் புண்ணியமாம் பூமியிலே தம் சனத்தை அழைத்தாரே பகலிலே மேகத்தினால் வழி நடத்தி அருளினாரே இரவினிலே அக்கினித் தூண் வழி காட்டச் செய்தாரே வனத்திலே கல்லினின்று தண்ணீரை அழைத்தாரே அவர் விருப்பம் நிறைவேறத் தந்தை போல் அருளினாரே தன் ஐனத்தைத் தேற்றியே பயம் இன்றி அழைத்தேகி தன் எதிரிகளை அந்நாளில் கடல் விழுங்கச் செய்தாரே தம் தெய்வ வலக்கரத்தால் தன் ஐனத்தை மீட்டாரே தூய மலைக் கவரை வல்லமையோடழைத்தாரே மேகங்களுக் காணையிட்டார் வானங்களின் கதவுகளை வல்லமையுடன் திறந்து விட்டார் புதுமை செய்தார் இன்பம் அளித்தார் மன்னா எனும் இன்னமுதை அற்புதமாகப் பொழிந்தாரே வானுலக அப்பத்தையே அடியவர்க்குத் தந்தாரே வான தூதர் உணவினையே மானிடர்கள் உண்டனரே இன்பமான உணவினையே அவர்களுக்கு அனுப்பினாரே இத்தனையும் அவர் புரிந்தும் பாவங்களைச் செய்தனரே அவர் செய்த புதுமைகளை நம்பாமல் துரோகம் செய்தார் அவர் செய்த புதுமைகளை விரைவாக மறந்தனரே நன்றியே இல்லாமல் கல்நெஞ்சம் படைத்தனரே நன்றியுடன் நாம் எல்லோரும் ஆண்டவர்க்குப் புகழ் சொல்வோம் அவர் செய்த நன்மைகளை எந்நாளும் நினைத்திடுவோம் |