திருப்பாடல்கள் | 471 - ஆண்டவர் எனது நல்லாயன் தி.பா 23 |
ஆண்டவர் எனது நல்லாயன் ஆகவே எனக்கொரு குறையுமிராது ஆண்டவர் எனது நல்லாயன் நீண்ட பசும்புல் தரை சேர்ப்பார் - குளிர் நீர் நிலைக்கெனையவர் நடத்திச் செல்வார் ஆன்ம வாழ்வுக்குயிர் தந்தருள்வார் அறநெறிதனிலே ஒழுகச் செய்வார் நாம் இருள் சூழும் பள்ளத் தாக்கில் நடக்க நேர்ந்தாலும் பயமே இல்லை ஏனெனில் என்னுடன் நீர் இருக்கின்றீர் எனை நின் கோலும் கழியும் தேற்றும் என் பகையாளர் முன் எனக்காக இனிய நல் விருந்தினை ஒழுங்கு செய்தீர் என் தலைமீது எண்ணெய் பூசி எனை அபிசேகம் செய்தே வைத்தீர் என்னே எனது பாத்திரம் நிறைந்து எத்துணை இன்பம் வழியுது பொங்கி என் புவி வாழ்வில் ஒவ்வொரு நாளும் எனைப் பின் தொடரும் உன் பேரன்பு என்றும் ஆண்டவர் வீட்டினில் உறைவேன் |