திருப்பாடல்கள் | 467அடைக்கலப் பாறையான யேசுவே தி.பா.18 (70) |
அடைக்கலப் பாறையான யேசுவே அரணும் கோட்டையும் ஆன யேசுவே நீரே எனது வலிமை நீரே எனது பெருமை நிரே எனது வாழ்வு யேசையா தாயின் வயிற்றினிலே பாதுகாப்பு நீரல்லவோ ஆண்டவரே பிறப்பிலும் வாழ்விலும் நீரே எனக்கு ஆதாரம் நீரல்லவோ - எந்தன் ஆதாரம் நீரல்லவோ போகும் வழியை விசாலமாக்கி - என் எல்லையைப் பெரிதாக்கினீர் உயரமான இடத்திலே என்னை நிறுத்தி மாண்புறச் செய்கின்றீரே - என்னை மாண்புறச் செய்கின்றீரே |