| தியானப் பாடல்கள் | பேசும் பேசும் பேசும் |
|
பேசும் பேசும் பேசும் பேசும் தெய்வமே- நீர் பேசாதிருந்தால் அழிந்து போகும் எந்தன் ஜீவனே... சரணம் : 1 கழுதையின் வாயைத் திறந்து நீர் போகும் திசையை உணர்த்தினீர் இஸ்ரவேலை ஆசீர்வதிக்க பிரியம் என்று பேசினீர் இன்றும் எந்தன் கண்களை திறக்க பேசுமே... சரணம் : 2 ஒரே ஒரு வார்த்தையால் அற்புதம் அதிசயம் செய்திரே சீஷர்கள் நடந்த பாதையில் கூடவே நடந்து பேசினீர் இன்றும் நீரே எந்தன் எல்லாம் என்று உணர்த்தவே - நீர் பேசுமே... சரணம் : 3 பாவ வாழ்வை வாழ்ந்த பெண்ணிடம் பாசமாய் நீர் பேசினீர் உன்னுடன் பேசும் நானே மேசியா என்று நீர் பேசினீர் இன்றும் நீரே எந்தன் முடிவு என வாழ நீர் பேசுமே.... |