Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  -உம்திருயாழில் என் இறைவா  

உம்திருயாழில் என் இறைவா - பல
பண்தரும் நரம்புண்டு
என்னையும் ஓர் சிறு நரம்பெனவே - அதில்
இணைத்திடவேண்டும் இசையரசே

யாழினை நீயும் மீட்டுகையில் இந்த
ஏழையின் இதயம் துயில் கலையும் - 2
யாழிசை கேட்டு தனை மறந்து - உந்தன்
ஏழிசையோடு இணைந்திடுமே - 2 (உம்திருயாழில்)

விண்ணகச் சோலையின் மலர் எனவே திகழ்
எண்ணிலாத் தாரகை உனக்குண்டு - 2
உன்னருட் பேரொளி நடுவினிலே - நான்
என் சிறு விளக்கையும் ஏற்றிடுவேன் - 2 (உம்திருயாழில்)

உன் ஒளித்திருநாள் நடனமதைக்கண்டு
என் சிறு இதயம் களிகூரும்
மன்னவன் உன்முக ஒளிச்சிதறும் - எழில்
புன்னகையோடெந்தன் வாழ்வினையும் - 2 (உம்திருயாழில்)
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்