Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள் நெஞ்சே நீ இறைவன் புகழைப்பாடு  

நெஞ்சே நீ இறைவன் புகழைப்பாடு
நெஞ்சே நீ அவரைப் போற்றிப்பாடு 2
ஓ...ஓ...அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

வழியோரம் தவித்து நின்றேன்
விழியோரம் கடந்து சென்றாய் - 2
பாதை காட்டினாய் - உன்
பாதம் நோக்கினேன் - 2
என்றும் உன்னை மறவேன் - ஓ..ஓ...

நீரின்றிக் களைத்து நின்றேன்
நீரோடை அழைத்துச் சென்றாய் - 2
தாகம் போக்கினாய் - உன்
தியாகம் போற்றினேன் - 2
என்றும் உன்னை மறவேன் - ஓ....ஓ....

அஞ்சாமல் பாவம் செய்தேன்
நெஞ்சோடு அணைத்துக் கொண்டாய் - 2
பாவம் போக்கினாய் உன்
பாசம் காண்கிறேன் - 2
என்றும் உன்னை மறவேன் - ஓ....ஓ...

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்