Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள் நீயே வாழ்வும் வழியும் இறைவா  

நீயே வாழ்வும் வழியும் இறைவா
உம்மை வணங்குகிறேன்
உம்மை வாழ்த்துகிறேன்
நலன்களால் நிரப்பும் இறைவா

உந்தன் அன்பிற்கீடாய் இங்கு ஏதுமில்லை
உறவுகள் வளர்ந்திட வருவாய்
நீயின்றி எனக்கொரு சக்தியில்லை
உறவென உயிரென இணைவாய்
இதயத்தால் உம்மைத் தொழுகிறேன்
இசையினால் உம்மைப் புகழ்கின்றேன்
வருவாய் வரம் தருவாய்

வானின்று இறங்கிய வார்த்தையே
வாழ்வில் துணையென வருவாய்
புதுயுகம் மலர்ந்திட வேண்டியே
ஆவியின் கொடைகளைத் தருவாய்
பணியினால் உம்மைத் தொடர்கிறேன்
பாசத்தால் உம்மைப் பணிகிறேன்
வருவாய் அருள் தருவாய்




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்