தியானப் பாடல்கள் | நீதானே என் சொந்தமே |
ஆ...ஆ...ஆ...ஆ.. நீதானே என் சொந்தமே நீங்காத என் பந்தமே தூங்காது என் கண்களே துணையாக நீ இல்லையேல் என் உயிரானவா என் உறவானவா மகிழ்வாக என் வாழ்வை தினம் காப்பவா என் உடன் வாழ வா என் துயர் போக்க வா உன் நெஞ்சோடு எனைச் சேர்த்து தாலாட்ட வா உறவாடிக் களிகூர்ந்த என் சொந்தங்கள் சுமை வந்த போதெல்லாம் பறந்தோடினர் நலமான பொழுதெந்தன் உடன் வாழ்ந்தவர் தடுமாற்றம் கண்டென்னைத் தனியாக்கினர் உன் தோள்களில் எனைத் தாங்கினாய் என் நெஞ்சத்தில் வலி போக்கினாய் தாயாக எனை என்றும் நீ தேற்றினாய் சோகங்கள் என் வாழ்வில் தினம் சூழ்கையில் நம்பிக்கை தீபங்கள் நீ ஏற்றினாய் இனி வாழ்ந்து பயன் இல்லை என எண்ணினேன் புவி வாழ்வில் பொருள் தந்து அறிவூட்டினாய் என் பாதையின் இருள் போக்கினாய் என் வாழ்க்கையின் புதிர் நீக்கினாய் தாயாக எனை என்றும் நீ தேற்றினாய் |