தியானப் பாடல்கள் | இரு கரம் கூப்பி இறையுனை தொழுதால் |
இரு கரம் கூப்பி இறையுனை தொழுதால் வரும் துயர் எல்லாம் மறைந்திடுமே உறை பனிக்குள்ளே உறைந்த என் உள்ளம் இறைவனே உன்னால் கரையாதோ கறை படும் வாழ்வு மறைந்திட நாளும் நிறைவுறும் அன்பே வாராயோ.... மணம் கமழ் மலரில் தும்பிகள் ஆயிரம் மயங்கியே தேனில் வீழாதோ என் மனம் இருளில் வாழ்ந்தது போதும் இறைவனே உன்னிடம் வாராதோ.... எண் சாண் உடலும் குறுகிட வன் மனம் உன் தாழ் சரணம் அடையாதோ கண் முன் படரும் திரையினை நீர்த்து உன் முன் என்றும் பணியாதோ... |