தியானப் பாடல்கள் | இறைவனே என்னைக் காக்கின்றார் |
இறைவனே என்னைக் காக்கின்றார் இனியொரு குறையும் எனக்கில்லை நிறைவழி நோக்கி நடத்திடுவார் நிம்மதியோடு நான் வாழ்வேன் பகலின் வெம்மையில் பயமில்லை இருளின் நிலவிலும் தீமையில்லை நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார் உன் கால் இடற விடுவதில்லை உன்னதர் என்றும் அயர்வதில்லை 2 இன்றும் என்றும் காப்பவராம் பயணத்தில் துணையும் அவர் கரமாம் நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார் தீமையைக் கண்டு நான் அஞ்சேன் நலமாய் நிதமும் நான் வாழ்வேன் |