தியானப் பாடல்கள் | எந்தன் சொந்தமே இயேசுவே |
எந்தன் சொந்தமே இயேசுவே எந்தன் நெஞ்சிலே வாருமே உன்னில் மகிழ்ந்து வாழ உன்னை எனக்குத் தாராய் எந்தன் சொல்லும் செயலும் உந்தன் உணர்வில் ஓங்குமே (2) எந்தன் சொந்தமே இயேசுவே சுமைகளால் வாழ்வை நான் வெறுத்திடும் போது சுகமாய் வாழ எழுந்தென்னில் வா (2) எனக்காய் நின் வாழ்வை வெறுமையாக்கினீர் 2 என்னையும் பிறர் அன்பில் வாழச் செய்குவாய் சிங்கார வாழ்வின் சிகரத்தில் இருந்தாலும் என் நெஞ்சிலே நீ இல்லையேல் (2) சரிந்தே வீழும் வாழ்வின் செல்வங்கள் 2 இதனையே உணர்ந்தே நான் வாழ விழைகிறேன் |