தியானப் பாடல்கள் | என்னை அழைத்தார் இறைவன் |
என்னை அழைத்தார் இறைவன் (2) - தம் அன்பினுக்கு ஓர் அருவியாக - தம் ஆற்றலுக்கு ஓர் கருவியாக என்னை அழைத்தார் இறைவன் (2) அன்பின்றி வாழ்ந்திடில் உலகு - பாலை நிலமாமே இறைவன் அன்பினில் வாழ்ந்திடில் என்றும் - சோலை வனமாமே இந்த அன்பு ஒன்றிற்கே சாட்சியாகவே பேச வாழ நடக்க என்னை அழைத்தார் தீமையின் ஆற்றல் ஓங்க - நன்மை தோன்றிடுமோ? நன்மை ஓங்கிட வேண்டும் என்றே - நல்லார் ஏங்குகின்றார் அந்த தீமை மீதிலே வெற்றி கொள்ளவே நன்மை நாளும் வளர்க்க என்னை அழைத்தார் |