தியானப் பாடல்கள் | என் தலைவா என்னை ஏன் அழைத்தாய் |
என் தலைவா என்னை ஏன் அழைத்தாய் பின்னே வாவென்று ஏன் மொழிந்தாய் தகுதியில்லா ஏழைக்கிந்த தகுதியை ஏன் அளித்தாய் தனியே நான் நின்ற வேளை நல்ல இசை போல் மனம் புகுந்தாய் பயந்தேன் நான் மிக வியந்தேன் நீ என்னை அணைத்தாய் நெஞ்சம் ஒன்றாய் இணைத்துக்கொண்டாய் வாழும் காலம் யாவும் உன்னோடு உலகில் வாழ பணித்தாய் என்ன நீ எனில் கண்டாய் தாகத்தில் நான் அமர்ந்திருந்தேன் இது போதும் என்றிருந்தேன் எழுந்தாய் நீ மெல்ல குனிந்தாய் ஏழைகள் பாதம் கழுவியே பாடம் சொன்னாய் எளிய மனிதர் துணையாய் எந்நாளும் உலகில் வாழ பணித்தாய் என்ன நீ எனில் கண்டாய் |