தியானப் பாடல்கள் | என் சொந்தம் நீயே |
என் சொந்தம் நீயே என் வாழ்வும் நீயே எல்லாமும் ஆனாய் நீயே எல்லாமும் ஆனாய் நீயே - எனக்கு எல்லாமும் ஆனாய் நீயே என் சொந்தம் நீயே என் வாழ்வும் நீயே - என் வாழ்வின் வழியும் நீயே உறவாடும் விருந்தானவா உயிரோடு கலந்திட வா - என் உணர்வோடு உறைந்திட வா வாடிய மலராய் வதங்கியே வீழ்ந்தேன் எந்நாளும் கதிராக ஒளிர்ந்தாய் நீயே தேடியும் கிடைக்காத தாயன்பே இங்கு நீயின்றி என் வாழ்வு வீணாகுதே அன்புத் தாயாக அழைத்தேன் என் துயர் தீருதே நீரின்றித் தவிக்கும் மான்போல ஆனேன் மழையாகி என் தாகம் தீர்ப்பாய் நீயே ஒரு வார்தை சொன்னாலே போதுமென்றேன் எனதுயிர் மனம் வழி வாழ்ந்திடுவேன் வாழ்வின் உணவாக உயிராக உடன் வாழுவேன் |