தியானப் பாடல்கள் | அன்பே அன்பே உயர்ந்தது |
அன்பே அன்பே உயர்ந்தது - இறை அன்பே உலகில் சிறந்தது (2) அன்பிற்காய் மனுவான அன்பிற்காய் தனைத் தந்த அவர் அன்பே உலகில் சிறந்தது - 2 இறையன்பில் வேரூன்றி நான் பிறரன்பில் செழித்தோங்கி அவரன்பின் ஆற்றலிலே நான் அவனியிலே காலூன்றி (2) அன்புப் பணியாற்றுவேன் அவர் அன்பில் பணியாற்றுவேன் - 2 மதவெறியை வேரறுத்து தினம் மனித இனம் தனை நினைத்து கல்வாரி சரித்திரத்தை நான் காலமெல்லாம் காத்திடவே (2) அன்புப் பணியாற்றுவேன் அவர் அன்பில் பணியாற்றுவேன் - 2 |