தியானப் பாடல்கள் | அன்பே அனைத்திலும் மேலானது |
அன்பே அனைத்திலும் மேலானது அன்பில்லையேல் அனைத்துமே வீணானது உள்ளத்தில் அன்பு இல்லையென்றால் ஒலித்திடும் வெண்கலமே எண்ணத்தில் அன்பு இல்லையென்றால் ஓசையிடும் வெறுந்தாளமே மானிடர் மொழிகள் தூதரின் மொழிகள் பேசிடினும் ஆண்டவர் வசனம் ஆற்றலாய் உணர்ந்து பேசிடினும் மறைபொருளின் அறிவினிலே மணிமுடிதான் அணிந்தாலும் மலைகளையே பெயர்த்தெறியும் மனதிடம் தான் அடைந்தாலும் அன்பினில் இனிமை நிறைந்திருக்கும் அன்பினில் புதுமை பிறந்திருக்கும் அன்பினில் பிறர்நலன் கலந்திருக்கும் அன்பினில் உயர்செயல் மிகுந்திருக்கும் இருப்பதெல்லாம் விருப்பமுள்ள இதயத்துடன் கொடுத்தாலும் பிறப்பு முதல் இறப்புவரை பிறர் பணியில் சிறந்தாலும் அன்பினில் பொறுமை நிலைத்திருக்கும் அன்பினில் உரிமை இணைந்திருக்கும் அன்பினில் பணிந்திடும் குணமிருக்கும் அன்பினில் பகிர்ந்திடும் மனமிருக்கும் |