தியானப் பாடல்கள் | இயேசுவே என் வாழ்வின் ஆதாரம் |
இயேசுவே என் வாழ்வின் ஆதாரம் நீ என் மனதினிலே நிறைந்திட வா இயேசுவே என் வாழ்வின் ஆதாரம் நீ என் மனதினிலே நிறைந்திட வா என் நினைவினிலே கலந்திடவா சோதனைக் கடலிலே மூழ்கி நான் பாய்ந்த போதும் துன்பங்கள் விலகியே தனிமையில் நின்ற போதும் (2) ஆறுதல் தந்து நீ என்னுயிர் காக்கிறாய் - (2) அருள் தந்து எம்மை நீயும் ஆள்கிறாய் என் இறைவனே என் தலைவனே உன்னைப் பாடியே வாழ்க்கையின் பயணங்கள் தடம் மாறிப் போன போதும் ஆசைகள் சூழவே அமைதி நான் இழந்தபோதும் (2) தோழமை தந்து நீ துணைக் கரம் நீட்டினாய் - (2) புதுவாழ்வு பெற உன்னைக் காட்டினாய் என் இறைவனே என் தலைவனே உன்னைப் பாடியே |