தியானப் பாடல்கள் | விடியலைத் தேடி வருகின்றேன் |
விடியலைத் தேடி வருகின்றேன் - உம் வார்த்தையை எந்தன் வாழ்வாக்கவே - இறைவா - விடியலை நிலையானது என்றும் நிலையானது - உம் வார்த்தைகள் என்றும் நிலையானது குறையாதது சற்றும் குறையாதது - அதில் உறைந்திடும் அன்பு குறையாதது - இன்று உயிர் வாழ்கின்றேன் உம்மில் நிறைவாகவே -2 உந்தன் பணிவாழ்வை முழுதாக நிறைவேற்றவே - இன்று விடியலை சிந்தையிலே உந்தன் சொந்தங்களே - என்றும் ஒயாத அலையாக எழுகின்றதே மந்தையின் ஆயனே என் யேசுவே - எந்தன் நெஞ்சமே உமைக் காண விளைகின்றதே நித்தம் கவி பாடுவேன் நாதா உமக்காகவே -2 உந்தன் இனிதான கனவினை நனவாக்கவே - இன்று விடியலை |